வெள்ளி, ஜனவரி 06, 2017

அலகுத் தேர்வு -9 class-10


வகுப்பு :10 ஆம் வகுப்பு                                                                      பாடம் : தமிழ்
மதிப்பெண்கள் : 50                                             நேரம் : 2 மணி
 


I.  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                             5×1=5
1) பா ____________வகைப்படும்.
அ) நான்கு         ஆ) ஐந்து          இ) ஆறு
2) உலகு என்னும் சொல் வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச் சீராயின் அதன் வாய்ப்பாடு _______________
அ) நாள் ஆ) காசு           இ) பிறப்பு
3) நல்லவை இச்சொல்லை அலகிட்டால் ___________எனப் பிரியும்.
அ) நேர் நேர்       ஆ) நிரை நேர்      இ) நேர் நிரை
4. நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடி ________________ வரும்.
அ) ஐந்து சீராய்              ஆ) முச்சீறாய்               இ) நாற்சீராய்
5. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் ____________முடிவது சிறப்பு.
அ) ஐகாரத்தில்              ஆ) ஏகாரத்தில்              இ) ஓகாரத்தில்

II.  கோடிட்ட இடத்தை நிரப்புக                                                          5×1=5
1. நேரிசை வெண்பா இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று ____________________ விகற்பத்தானும் _______________ விகற்பத்தானும் வரும்.
அ) ஒன்று, இரண்டு          ஆ) ஒன்று, ஒன்று  
இ) ஒன்று , மூன்று  
2.. வெண்பாவின் ஓசை  ____________ ஆகும்.
அ) அகவல்    ஆ) செப்பல்            இ) துள்ளல்
3. ஆசிரியப்பாவின் வேறு பெயர்  
அ) அகவற்பா                ஆ) வஞ்சிப்பா                 இ) கலிப்பா
4. ஆசிரியப்பாவின் ஓசை
அ) அகவல்                   ஆ) தூங்கல்                இ) செப்பல்
5. வெண்பாவின் அடி வரையறை _____________
அ) 2 அடி முதல் 12 அடி வரை         ஆ) 2 அடி முதல் 10 அடி வரை                இ) 2 அடி முதல் 11 அடி வரை

III. சான்று தருக                                                                        5×1=5
1. வெண்பா _____________ வகைப்படும்
அ) ஐந்து                   ஆ) ஆறு                     இ) பன்னிரண்டு
2. ஆசிரியப்பாவில் எந்த சீர் வராது
அ) வஞ்சியுரிச்சீர் ஆ) வெண்சீர்       இ) மாச்சீர்
3. நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்ப்பாடுகளுள் ஒன்றைப் பெற்று முடியும் பா வகை
அ) ஆசிரியப்பா              ஆ) வெண்பா                இ) கலிப்பா
4. வெண்பாவில் பொது இலக்கணம்  பெற்றுத் தனிச்சொல் இன்றி நான்கு அடிகள் உடையதாய் வரும் பா __________________
அ) இன்னிசை வெண்பா                ஆ) இன்னிசை சிந்தியல் வெண்பா    இ) நேரிசை வெண்பா
5. ஈற்றயலடி முச்சீர்  
அ) நேரிசை வெண்பா                  ஆ) நேரிசை ஆசிரியப்பா             இ) இணைக்குறள் ஆசிரியப்பா

IV. சரியான சொற்றொடரை தெரிவு செய்க                                               5×1=5
1.                     அ) ஆசிரியப்பா நான்கு வகைப்படும்
ஆ) ஆசிரியப்பா ஐந்து  வகைப்படும்
இ) ஆசிரியப்பா ஆறு  வகைப்படும்
ஈ) ஆசிரியப்பா ஏழு வகைப்படும்

2.                   அ) அடிகளை எவ்வாறு மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாதது நிலைமண்டில ஆசிரியப்பா
ஆ) அடிகளை எவ்வாறு மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாதது அடிமறி மண்டில  ஆசிரியப்பா
இ) அடிகளை எவ்வாறு மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாதது இணைக்குறள் ஆசிரியப்பா
ஈ) அடிகளை எவ்வாறு மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாதது நேரிசை  ஆசிரியப்பா

3.                   அ) நேர் நேர் நிரை தேமாங்காய்
ஆ) நேர் நேர் நிரை தேமாங்கனி
இ) நேர் நேர் நிரை கருவிளங்காய்
ஈ) நேர் நேர் நிரை கூவிளங்காய்

4.                     அ) வாலறிவன் - தேமாங்காய்  
ஆ) வாலறிவன் - புளிமா
இ) வாலறிவன் - கூவிளங்காய்
ஈ) வாலறிவன் - புளிமாங்காய்

5.                     அ) பெண் ஈற்றுச்சீர் வாய்ப்பாடு காசு
ஆ) பெண் ஈற்றுச்சீர் வாய்ப்பாடு பிறப்பு
இ) பெண் ஈற்றுச்சீர் வாய்ப்பாடு நாள்
ஈ) பெண் ஈற்றுச்சீர் வாய்ப்பாடு மலர்

V. அறிக்கை  வடிவில் விடை  எழுதுக (இரண்டனுக்கும் விடையளி)                  8
அ)  கண்தான முகாம்
ஆ) மரம் நடுவிழா

VI.துணைப்பாடம்                                                                      8
   அ) அயோத்திதாசர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து கட்டுரை எழுதுக.

VII சிறுவினா                                                                          9
  அ) குலசேகர ஆழ்வார் திரு வித்துவக் கோட்டு இறைவனிடம் வேண்டுவது யாது?
  ஆ) வள்ளலார் ஏற்படுத்திய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் குறித்து கட்டுரை எழுதுக.

VIII. கீழுள்ள பாடலைப்  படித்து அதனைத் தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு விடையளிக்க                                                                                                                                                                                      5
மீன்நோக்கும் நீல்வயல்சூல் வித்துவக்கோட் டம்மா என்
பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கி வாழும் குடிபோன் றிருந்தேனே.
வினாக்கள்;
1. வித்துவக்கோடு இவற்றால் சூழப்பட்டது?
அ) குளங்களால்   ஆ) நீல்வயல்களால்  இ) கோவில்களால்
2. தார் என்பதன் பொருள் யாது?
அ) மாலை              ஆ) மலை         இ) அழகு
3. குடி என்பது எப்பொருள் தரும்
அ) பருகுதல்                              ஆ) மக்கள்                     இ) திருவடி
4. இப்பாடல் இத்தொகுப்பில் அமைந்துள்ளது.
அ) தேவாரம்   ஆ) கலித்தொகை இ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
5. இப்பாடலை எழுதியவர் _____________.

அ) மாணிக்கவாசகர்         ஆ) குலசேகரர்      இ) அப்பர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக