வெள்ளி, ஜனவரி 06, 2017

ஆயத்தத் தேர்வு - 1 class - 8


வகுப்பு : 8 ஆம் வகுப்பு                                         பாடம் : தமிழ் மதிப்பெண்கள் :50                                               நேரம் : 2:00
 


I.            கீழுள்ள பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு விடையளிக்க                                                          5×1=5
மனித குலத்தின் மேன்மையைப் பயன் வடிவில் மக்களெல்லாம் ஒன்று கூடி துய்த்து இன்புறுகின்ற இணையில்லாத் திருநாள் தான் பொங்கல்! பழமைகளை பக்குவமாய் வழியனுப்பிவிட்டு, வளர்ச்சிக்கு வளமை கூட்டும் புது வரவுகளுக்கு மலர்ச்சியோடு மக்கள் தம் மனத்தால் வரவேற்ப்பு இசைத்திடும் வண்ணத் திருநாள் தான் பொங்கல். தமிழர்த் திருநாளாம் பொங்கல், தைத்திங்கள் நாள்விழா, தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க விழா, தமிழினத்தின் தனிவிழா, பண்பாட்டுப் பெருவிழா, மக்கள் மனங்களில் நிறைந்திருக்கின்ற அன்புப் பெருக்கம், நன்றி காட்டல், புதுமை வேட்டல் முதலிய உணர்வுகள் பொங்கிப் பெருகிடும் பொன்விழாவே பொங்கல் நன்னாள்!
வினாக்கள் :
1.பொங்கல் விழா எவ்வினத்தின் தனி விழா?
அ)மக்கள்                        ஆ)வரவேற்ப்பு             இ)பண்பாடு                  ஈ)தமிழினத்தின்
2. மக்கள் மனதில் எது பொங்கிப் பெருகிடும் ?
அ)நன்றிகாட்டல்       ஆ)பொன்விழா            இ)பொங்கல்                ஈ)நன்னாள்
3.பொங்கல் எப்பெரு விழா?
அ) புதுமை வேட்டல் ஆ)பண்பாட்டு         இ) அன்புப் பெருக்கம் ஈ) நன்றி காட்டல்
4. மனித குலத்தின் உழைப்பின் மேன்மையை உணர்த்தும் நாள் எது?
அ) தனி விழா           ஆ) பெரு விழா            இ) பொங்கல்              ஈ)திருநாள்
5.மக்கள் மலர்ச்சியோடு எவற்றிற்கு வரவேற்ப்பு இசைப்பர்?
அ) புதுவரவிர்க்கு       ஆ) பழமைக்கு           இ) நன்னாள்               ஈ)வாழ்வு

II.            சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                   6\×1=6
1.கம்பர் பிறந்த ஊர்______________
அ) திருவாரூர்          ஆ) தேரழுந்தூர்     இ) திருநெல்வேலி
2.கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை___________.
அ)நான்கு      ஆ) ஐந்து         இ) ஆறு
3.காரணப் பொதுப் பெயர்____________ஆகும்.
அ)வளையல் ஆ) மண் இ) நண்டு
4.அழகின் சிரிப்பு என்ற நூலை இயற்றியவர்  ____________________.
அ) கண்ணதாசன்  ஆ) பாரதிதாசன்  இ) பாரதியார்
5.மரம்  ______________ உயிர்
அ) ஓரறிவு     ஆ) ஈரறிவு        இ) ஆறறிவு
6. திருவருட்பாவை இயற்றியவர் _______________
அ) இராமலிங்க அடிகளார்  ஆ) கம்பர்  இ) பாரதியார்

III.            கோடிட்ட இடத்தை நிரப்புக                                            3×1=3
1 .’உலகம் உருண்டை வடிவமானது’ எனக் கூறிய முதல் தமிழ் குரல்  ________________.
2. தமிழனின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத் தக்கது ________________.
3. வில்லிபாரதத்தைப் பாடியவர் _______________________.

IV.            பிரித்து எழுதுக                                                                  2×1=2
1.திருவுளம்  =                             2.தன்னினம் =

V.            ஓரிரு சொற்களில் விடையளி                                                                   3×1=3
அ) ‘மன்னிப்பு’ இச்சொல்லுக்கு உரிய தமிழ் சொல் என்ன?
ஆ) தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் யார்?
இ) தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?

VI.            சேர்த்து எழுதுக                                                                  2×1=2
அ) உணவு+ இன்றி =             ஆ)சொல் + பொழிவு=

VII.            பொருள் தருக                                                                   2×1=2
அ) நாமம்-                        ஆ) மாசு -

VIII.            தமிழெண்களை அறிக                                                          2×1=2
அ) 23=____                       ஆ) 87=____

IX.            கீழ்காணும் தொடர்களில் உரிய மயன்கொலி சொற்களை கொண்டு நிரப்புக 2×1=2
1.__________யின் ஒரு பகுதி மட்டுமே ____________ பெய்தது.   (மழை / மலை)
2. வயலில் __________ந்த சோளக் கதிர்களை ___________க்கு விற்க வளவன் முடிவெடுத்தான்.         (விலை / விளை )

X.            மனப்பாடப் பகுதி (செய்யுள் வடிவில் விடையளி)                                               2+4=6
அ) ‘வாடிய பயிரை’  .............. எனத்தொடங்கும் கல்விக்கு திருவருட்பா  செய்யுட்பாடலை அடி பிறழாமல் நான்கு அடிகள் மட்டும்  எழுதுக.
ஆ) ‘அரம்போலும்’ எனத்தொடங்கும் திருக்குறள் செய்யுட்பாடலை அடி பிறழாமல் எழுதுக.                                                               
XI.            குறுவினக்கள்(மூன்றனுக்கு மட்டும் விடையளி)                                                3×2=6
1)        இயற்கைச் சமநிலை என்றால் என்ன ?
2)        வனவிலங்கு வாரம் எப்போது முதல் கொண்டாடப் படுகிறது?
3)        உலகம் நிலைபெற்று இருக்க காரணம் யாது?
4)        திருவருட்பா குறிப்பு எழுதுக ?
5)        தான் பெற்ற பெரும் பேராக கன்னன் கூறியது என்ன?
6)        பாவானாரின் சொல்லாட்சி சிறப்பினை விளக்குக ?

XII.            குறுவினக்கள்(மூன்றனுக்கு மட்டும் விடையளி)                                                3×2=6
1)        உடம்படு மெய் என்றால் என்ன சான்று தருக.
2)        நான்காம் வேற்றுமை உருபுகள் யாவை? அஃது எந்த பொருளில் வரும்.
3)        கருத்தா எத்தனை வகைப்படும் சான்று தருக.
4)        விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் சான்று தருக.
5)        பாடம்+புத்தகம். சேர்த்து எழுதி, எவ்வகைப் புணர்ச்சி எனக் குறிப்பிடுக
6)        ஆறாம் வேற்றுமையில் ஒருமைக்கு வரும் உருபுகள் யாவை? சான்று தருக.

XIII.            நெடுவினா (ஒன்றனுக்கு மட்டும் விடையளி)                                    5×1=5
அ) தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர் என்பதனை என்பதனை நிறுவுக.
(அல்லது)
ஆ) தேவநேய பாவனார் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை விவரிக்க.
                            

                                      ********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக