ஆயத்தத் தேர்வு - 1
I.
கீழுள்ள பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு
விடையளிக்க 5*1=5
எனக்குப்
பிடித்த வீட்டு விலங்குகளில் சிறந்தது ‘நாய்’ பலர் திட்டுவதற்கு நாயைக் கூறினாலும்
நன்றி என்னும் உணர்வுக்கு எடுத்துக்காட்டாக அமைவது நாய் தான். பாரதியார் தான்
பாடிய பாப்பா பாட்டில் நாயின் அன்பை அன்புடன் பாதுகாக்கும்
முதலாளிக்கு வாலை
ஆட்டித் தன்நேசத்தை வெளிப்படுத்தும். நாயில் பல வகைகள் உள்ளன. ‘பைரவர்’ என்று அழைக்கப்படும்
நாய் தெய்வத்தன்மையுடையதாக மதிக்கப்படுகிறது. கால பைரவர் என்ற கோவில்களில் தனிச்
சந்நிதியுடன் விளங்குகிறது. நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் காலன் வருவதை அறியும்
உணர்வு நாய்க்கு உள்ளது. என நம்புகின்றனர். நாய்க்கு மோப்பம் பிடிக்கும் உணர்வு
இருப்பதால் திருடனைக் கண்டு பிடிக்கும் ஆற்றல் இருக்கிறது. மாமிச உணவு தின்னும்
நாய்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாழும் தன்மையுடையது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
அனைவருமே நாயை விரும்பி வளர்க்கின்றனர். வீட்டைக் காப்பதும்,உயிரைக் காப்பதும்
நாய்தான்.
வினாக்கள்
1.நன்றி என்ற உணர்விற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் விலங்கு எது ?
அ)நாய் ஆ)குதிரை இ)பூனை ஈ)மாடு
2.பாரதியார் பாடலில் நாயைப் பற்றி குறிப்பிட்ட வரியைத் தருக
அ)மனிதர்க்குத் துணையடி பாப்பா ஆ)
மனிதர்க்குத் தலைவனடி பாப்பா
இ) மனிதர்க்குத் தோழனடி பாப்பா ஈ)
மனிதர்க்குப் பகைவனடி பாப்பா
3.நாய் தன் முதலாளிக்கு எவ்வாறு தன நேசத்தை வெளிப்படுத்தும் ?
அ)தலையாட்டி ஆ)உடலையாட்டி
இ)காதையாட்டி ஈ)வாலையாட்டி
4.யார் வருவதை அறியும் திறனுடையது நாய்?
அ)காலன் ஆ)எமன் இ)கடவுள் ஈ)சனி
பகவான்
5. நாய்க்கு எச்சக்தி மிக அதிகமாக உள்ளது?
அ)திருடனைக் கண்டுபிடிக்கும் சக்தி ஆ)மோப்ப
சக்தி
இ)துரத்தும் சக்தி ஈ)வீட்டைப்
பாதுகாக்கும் சக்தி
II.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5×1=5
1) நிகரற்ற தொழில் _____________
அ) அலுவலக தொழில் ஆ) காவலர் இ) உழவுத் தொழில்
2) அம்மானை பாடலில் போற்றப்படும் தெய்வம் _____________
அ) சிவன் ஆ) நான்முகன் இ) முருகன்
3) புரவி என்பதன் பொருள் ________________
அ) யானை ஆ) குதிரை இ) பசு
4. கேட்காத
கடனும் பார்க்காத பயிரும் _________________________.
அ) பாள் ஆ) பால் இ) பாழ்
5. விளையாட்டின் அடிப்படை நோக்கம் ____________________.
அ) போட்டியிடுதல் ஆ)
சண்டையிடுதல் இ)
பேசுதல்
III.
கோடிட்ட இடத்தை நிரப்புக 2×1=2
1. முல்லை நிலத்தில் _____________என்னும் வீர விளையாட்டு நடைபெற்றது.
2. மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் ___________________.
IV.
பொருத்துக 4×1=4
அ) காகம் - ஊளையிடும்
ஆ) குதிரை - கரையும்
இ) சிங்கம் -
கனைக்கும்
ஈ) நரி –
முழங்கும்
V.
பிரித்து எழுதுக 2×1=2
அ) நேரிங்கே = ஆ) நின்னடி =
VI.
சேர்த்து எழுதுக 2×1=2
அ) நெல்+கதிர் = ஆ) பருவம் + பெண் =
VII.
பொருள் தருக 3×1=3
அ) கனகம் – ஆ)
மாரி - இ) சேமம் -
VIII.
தமிழெண்களை அறிக 2×1=2
அ) 25= ஆ)19 =
IX.
மனப்பாடப் பகுதி 2+4=6
அ) நீயன்றி மன்னுண்டோ ..... எனத் தொடங்கும் பொங்கல் வழிபாடு செய்யுள் பாடலை எழுதுக.
ஆ ) ‘‘கேடில் விழுச்’’ ....... எனத் தொடங்கும் திருக்குறள் செய்யுள்பாடலை
எழுதுக.
X.
குறுவினாக்கள் (மூன்றனுக்கு
மட்டும்விடையளி ) 3×2=6
1. முத்து முத்தான வியர்வைக்கு கிடைத்த பயன் என்ன?
2. திருச்செந்திற் கலம்பகம் நூல் – குறிப்பு எழுதுக.
3. கைத்தறி ஆடைகளின் புகழ் பரப்பியவர் யாவர்?
4. தொழு உரம் என்றால் என்ன?
5. வாய்க்கால் நீரை அடைத்தது எது?
6. புறநானூறு கூறும் வீர விளையாட்டுகள் யாவை?
XI.
குறுவினாக்கள்
(மூன்றனுக்கு மட்டும் விடையளி) 3×2=6
1. ஓரெழுத்து ஒருமொழிக்கு சான்றுகள் ஐந்து
எழுதுக.
2. பகுபதத்தின் உறுப்புகள் யாவை?
3. போலி என்றால் என்ன?
4. போலி எத்தனை வகைப்படும்?
XII.
கட்டுரை வடிவில் விடை எழுதுதல் 7×1=7
அ) உரம், பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் தீமைகளை விவரி.
(அல்லது)
ஆ) தமிழர்களின்
விளையாட்டுகள் பற்றி கட்டுரை வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக