வகுப்பு : 9 ஆம் வகுப்பு பாடம் : தமிழ்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 3×1=3
1) தளை ____________ வகைப்படும்
அ) நான்கு ஆ) ஏழு
இ) ஆறு
2) நீர், நீவிர், நீயிர், நீங்கள், ஆகியன ____________ பெயர்கள்.
அ) முன்னிலை ஒருமை ஆ)
முன்னிலைப் பன்மை இ) தன்மைப் பன்மை
3) கருவியாகு பெயர் சான்று தருக.
அ) யாழ் கேட்டு மகிழ்ந்தேன் ஆ) நான் சமையல் கற்றேன்
இ) திருவள்ளுவரைப் படித்துப் பார்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக 3×1=3
1. காய் முன் நேர் வருவது _____________தளை ஆகும்.
அ) இயற்சீர் வெண்டளை ஆ) வெண்சீர் வேண்டளை
இ) கலித்தளை
2.. தாம் என்னும் படர்க்கைப் பன்மைப் பெயர் வேற்றுமை உறுப்பு ஏற்கும்
போது ____ எனத் திரியும்.
அ) எம் ஆ) உம் இ)
தம்
3. அளை என்பதன் பொருள்
அ) பாம்பு ஆ)
புற்று இ) பாம்புப் புற்று
III. சான்று தருக 3×1=3
1. கண்ணா அசை பிரித்திடுக
அ) நேர் நிரை ஆ) நிரை நிரை இ)
நேர் நேர்
2. நான், யான் என்பவை வேற்றுமை உறுப்பு ஏற்கும் போது ____________எனத்
திரியும்.
அ) நீ, உன்னை ஆ) என்னை இ) அவனை
3. மரம்+வேர்= _____________
அ) மரம்வேர் ஆ) மரவேர் இ) மராவேர்
IV. சரியான சொற்றொடரை தெரிவு செய்க 3×1=3
1.அ) விளமுன் நிரை வருவது நிரை
ஒன்றாசிரியத்தளை
ஆ) விளமுன் நிரை வருவது நேர்
ஒன்றாசிரியத்தளை
இ) விளமுன் நிரை கலித்தளை
ஈ) விளமுன் நிரை வெண்சீர் வெண்டளை
2. அ) தான், தாம், தாங்கள் என்பன தன்மைப் பெயர்கள்
ஆ) தான், தாம், தாங்கள் என்பன முன்னிலைப் பெயர்கள்
இ) தான், தாம், தாங்கள் என்பன படர்க்கைப் பெயர்கள்
ஈ ) தான், தாம், தாங்கள் என்பன ஒருமைப் பெயர்கள்
3. அ) நேர் நேர் நிரை தேமாங்காய்
ஆ) நேர் நேர் நிரை தேமாங்கனி
இ) நேர் நேர் நிரை கருவிளங்காய்
ஈ) நேர் நேர் நிரை கூவிளங்காய்
V. இலக்கணக் குறிப்புத் தருக. 3×1=3
1.நான், யான் என்பவை ______________பெயர்கள்
அ) தன்மைப் பெயர்கள் ஆ) முன்னிலைப் பெயர்கள் இ)
படர்க்கைப் பெயர்கள்
2. கற்கோட்டை என்பது
அ) திரிதல் விகாரம் ஆ) தோன்றல் விகாரம் இ) இயல்பு புணர்ச்சி
3. காய் முன் நிரை வருவது
அ) ஒன்றிய வஞ்சித்தளை ஆ) ஒன்றாத வஞ்சித்தளை இ) கலித்தளை
VI. கட்டுரை வடிவில் விடை எழுதுதல் 8
அ) சாலை வசதி வேண்டி விண்ணப்பம் வரைக.
(உனது முகவரி பூரணி/ பூரணன் எண் 1, இளங்கோவடிகள் நகர், முதல் தெரு,
மடிழப்பாக்கம், சென்னை. எனக்கொள்க )
VI.துணைப்பாடம் 8
அ) முருகனின் நேர்மையை
விளக்கி எழுதுக.
VII சிறுவினா 9
அ) சான்றான்மையின் இலக்கணம் யாது?
ஆ) மாட்டுப் பொங்கல் எவ்வாறு கொண்டாடப்
படுகிறது?
VIII. கீழுள்ள பாடலைப்
படித்து அதனைத் தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு விடையளிக்க 5
தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தேந்தாய்
இன்னதென அறிகிலார் தாம் செய்வ திவர்பிழையை
மன்னியுமென் எழிற்கனிவாய் மலர்ந்தார் நம் அருள் வள்ளல்.
வினாக்கள்;
1. இரட்சணிய யாத்ரிகம் _____________ நூலைத் தழுவி இயற்றப்பட்டது?
அ) விவிலியம் ஆ) தி வே ஆப் சீக்ரெட் இ)
பில்கிரிம்ஸ் ப்ரோக்ரஸ்
2. கிறித்தவக் கம்பர் ___________
அ) எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை ஆ)
ஜோசெப் பெஸ்கி இ) ஜி.யூ.போப்
3. பலபாடு பொருள் தருக
அ) பல துன்பம் ஆ) பல பாடல் இ) பல பாவம்
4. இயேசு பிறந்த இடம்_____________.
அ) பெத்தலேகம் ஆ)
வேளாங்கண்ணி இ)
கல்வாரிமலை
5. இயேசுவின் தந்தை ___________
அ) யூதாசு ஆ) சீசர் இ) ஜோசெப்
IX. கீழுள்ள பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு
விடையளிக்க 5*1=5
எனக்குப் பிடித்த வீட்டு விலங்குகளில் சிறந்தது ‘நாய்’ பலர்
திட்டுவதற்கு நாயைக் கூறினாலும் நன்றி என்னும் உணர்வுக்கு எடுத்துக்காட்டாக அமைவது
நாய் தான். பாரதியார் தான் பாடிய பாப்பா பாட்டில் நாயின் அன்பை அன்புடன்
பாதுகாக்கும்
முதலாளிக்கு வாலை ஆட்டித் தன்நேசத்தை வெளிப்படுத்தும். நாயில் பல
வகைகள் உள்ளன. ‘பைரவர்’ என்று அழைக்கப்படும் நாய் தெய்வத்தன்மையுடையதாக மதிக்கப்படுகிறது.
கால பைரவர் என்ற கோவில்களில் தனிச் சந்நிதியுடன் விளங்குகிறது. நாய்க்கு மோப்ப
சக்தி அதிகம் காலன் வருவதை அறியும் உணர்வு நாய்க்கு உள்ளது. என நம்புகின்றனர். நாய்க்கு
மோப்பம் பிடிக்கும் உணர்வு இருப்பதால் திருடனைக் கண்டு பிடிக்கும் ஆற்றல்
இருக்கிறது. மாமிச உணவு தின்னும் நாய்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாழும் தன்மையுடையது. சிறுவர்கள்
முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நாயை விரும்பி வளர்க்கின்றனர். வீட்டைக்
காப்பதும்,உயிரைக் காப்பதும் நாய்தான்.
வினாக்கள்
1.நன்றி என்ற
உணர்விற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் விலங்கு எது ?
அ)நாய் ஆ)குதிரை இ)பூனை
ஈ)மாடு
2.பாரதியார் பாடலில்
நாயைப் பற்றி குறிப்பிட்ட வரியைத் தருக
அ)மனிதர்க்குத்
துணையடி பாப்பா ஆ) மனிதர்க்குத் தலைவனடி
பாப்பா
இ) மனிதர்க்குத்
தோழனடி பாப்பா ஈ) மனிதர்க்குப் பகைவனடி
பாப்பா
3.நாய் தன்
முதலாளிக்கு எவ்வாறு தன நேசத்தை வெளிப்படுத்தும் ?
அ)தலையாட்டி ஆ)உடலையாட்டி
இ)காதையாட்டி ஈ)வாலையாட்டி
4.யார் வருவதை
அறியும் திறனுடையது நாய்?
அ)காலன் ஆ)எமன் இ)கடவுள்
ஈ)சனி பகவான்
5. நாய்க்கு எச்சக்தி
மிக அதிகமாக உள்ளது?
அ)திருடனைக்
கண்டுபிடிக்கும் சக்தி ஆ)மோப்ப
சக்தி
இ)துரத்தும் சக்தி ஈ)வீட்டைப் பாதுகாக்கும்
சக்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக