ஏழாம் வகுப்பு பணித்தாள் FA-1
கோடிட்ட இடத்தை நிரப்புக
அ) திரு.வி.கலியானசுந்தரனார் பிறந்த ஊர்__________________________.
ஆ) திரு.வி.க இயற்றிய ‘பொதுமை வேட்டல்’ என்னும்
நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை__________________________________.
உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
‘வன்மையை உயிரில் வைத்த’ இத்தொடரில் ‘வண்மை’
என்னும் சொல் தரும் பொருள் __________________
அ)வலிமை ஆ)கொடைத்தன்மை இ) வளமை
குரு வினாக்கள்
அ) திரு.வி.கலியானசுந்தரனாரின் பெற்றோர் யாவர்?
ஆ) திரு.வி.கலியானசுந்தரனார் இயற்றிய நூல்கள்
யாவை?
இ) இறைவன் உயிரில் வைத்தது எதனை?
சிருவினாக்கள்
அ) திரு.வி.கலியானசுந்தரனார் பற்றி குறிப்பு
எழுதுக.
ஆ) இறைவன் பெருமையை திரு.வி.கலியானசுந்தரனார்
எவ்வாறெல்லாம் குறிப்பிடுகின்றார்?
திருக்குறள்
கோடிட்ட இடத்தை நிரப்புக
அ) குரல் வெண்பாக்களால் ஆன நூல்_______________________.
ஆ) திருக்குறளில் _______________________
அதிகாரங்கள் உள்ளன.
இ) உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் திருக்குறள்_____________________________
என வழங்கப்படுகிறது.
உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1)உடலை நீர் தூய்மை செய்யும்; உள்ளத் தூய்மையை
வெளிப்படுத்துவது___________
அ) இன்னாச்சொல் ஆ)வாய்மை இ)பழிச்சொல்
2.
வாய்மை எனப்படுவது யாதெனில்________________
அ)மற்றவர்களுக்கு தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
ஆ) புறங்கூறாமை இ) பழிகூறாமை
பிரித்து எழுதுக
அ)யாதெனின்
ஆ) பொய்யாதொழுகின்
இ) புறந்தூய்மை
சேர்த்து எழுதுக
அ)தன்+நெஞ்சு=
ஆ) புகழ்+இல்லை=
பின் வரும் சொற்களை சொற்றொடரில் அமைக்க
அ)இயற்க்கை
ஆ)பெண்மை
இ) வாய்மை
ஈ) உள்ளம்
குருவினாக்கள்
அ) பொய்மையும் வாய்மையாவது எப்போது?
ஆ) வள்ளுவர் குறிப்பிடும் தூய்மை பற்றி
குறிப்பிடுக.
இ) அகவிருளைப் போக்கும் விளக்கு எது?
சிறு வினாக்கள்
அ) வாய்மையின் இலக்கணமாக வள்ளுவர் குறிப்பிடுவது
யாது?
ஆ) உண்மையைப் பேசுவோரின் சிறப்பியல்புகள் யாவை?
இ) அகவிருளைப் போக்கும் விளக்கை குறள் வழி
விளக்குக.
ஈ) உலகத்தாரின் உள்ளத்துள் இருப்பாரைப் பற்றி
வள்ளுவர் கூறுவது என்ன?
செம்மொழித் தமிழ்
கோடிட்ட இடத்தை நிரப்புக
அ)உலகில் மிகப்பழமையான நிலப்பகுதி __________________
ஆ) தமிழில் _______________________ பெயர்கள்
மிகவும் குறைவு.
இ) எல்லா மொழிகளும் எழுத்துக்கும் ______________
இலக்கணம் கூறும்.
ஈ)புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்பு சேர்க்க
உவமை, _____________________ பயன்படுத்தி அழகு சேர்த்தனர்.
உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1.உலக மொழிகளில் சிறந்து விளங்குவது
அ)தமிழ் மொழி ஆ) வடமொழி இ) மலையாளம்
2.அம்மை, அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு
அ)கொங்கு நாடு ஆ) வருச நாடு இ) நாஞ்சில் நாடு
3. வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி
அ) வடமொழி ஆ)தெலுங்கு மொழி இ)தமிழ் மொழி
குருவினாக்கள்
அ) உலக மொழிகளில் சிறந்த மொழி எது?
ஆ) செம்மொழியாகக் கருதப்படும் மொழிகள் யாவை?
இ) தமிழின் இனிமை மாறத்தன்மைக்குக் காரணம் என்ன?
ஈ)தமிழ், உயர்தனிச் செம்மொழி எனப் போற்றப்படுவதேன்?
சிறு வினாக்கள்
அ) செம்மொழித் தமிழின் தனிச் சிறப்புகள் யாவை?
ஆ) தமிழ், தனித்தியங்கும் மொழி என்பதனைக்
குறிப்பிடுக.
இ) தமிழ், தொன்மை மொழி என்பதனைக் குறிப்பிடுக.
நெடுவினா
தமிழின் தனிப்பெரும் தன்மைகளை விளக்குக.
ஊரும் பெயரும்
குறிஞ்சி, முல்லை நில ஊர்ப் பெயர்களை உரிய
சான்றுகளுடன் விளக்குக.
மருதம், நெய்தல் நில ஊர்ப் பெயர்களுக்கான
காரணங்களை எழுதுக.
பட்டி என்னும் ஊர்ப் பெயர்களைத் தொகுக்க.
சார்பெழுத்துகளின் வகைகள்
கீழுள்ள சொற்களில் முதலெழுத்துகளை வட்டமிடுக.
அ) அன்பு ஆ) கடல் இ) இன்பம் ஈ) அம்மா உ) தமிழ்
உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
ஆய்தம் _______________எழுத்து வகையைச்
சார்ந்தது.
அ)முதல் எழுத்து ஆ)மெய்யெழுத்து
இ)சார்பெழுத்து
2. சார்பெழுத்துகள் _______________
வகைப்படும்.
அ)10 ஆ)12 இ)30
3.முதல் எழுத்துகளின்
எண்ணிக்கை _________________.
அ) 216 ஆ)30 இ)26
குருவினாக்கள்
அ) முதல் எழுத்து என்றால் என்ன ?
ஆ) முதல் எழுத்துகள் யாவை?
இ) சார்பெழுத்து என்றால் என்ன?
ஈ) சார்பெழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?
உ) இரண்டு – இச்சொல்லில் இடம்பெற்றுள்ள
சார்பெழுத்துகளை எழுதுக.
ஊ) சார்பெழுத்துகள் இடம்பெறாத நான்கு சொற்களை
எழுதுக.
பொருள் கூறுக
அ)பண் –
ஆ)அகம்-
பிரித்து எழுதுக
அ) யாதொன்றும் =
ஆ) பயக்குமெனின் =
கோடிட்ட இடத்தை நிரப்புக
1.திரு.வி.க ___________________ இதழின்
ஆசிரியராக இருந்தார்.
2. ஆற்றூர் பேச்சு வழக்கில் ___________________
என மருவியுள்ளது.
உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1.தனித்து இயங்கும் எழுத்துக்கள் ______________________
அ) சார்பெழுத்து ஆ) ஆய்த ழுத்து இ) முதல்
எழுத்து
குருவினாக்கள்
அ) உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன்
யார்?
ஆ) தமிழ் மொழியின் செவ்வியல் இலக்கியங்கள் நான்கனை
எழுதுக.
கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் படித்து
வினாக்களுக்கு விடையளிக்க.
சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி – அன்பு
நிறைய
உடையவர்கள் மேலோர்
உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல்
வேணும்
வயிரமுடைய நெஞ்சு வேணும் – இது
வாழும்
முறைமையடி பாப்பா.
வினாக்கள்
அ) எது பாவம்?
ஆ) மேலோர் எத்தன்மையர்?
இ) யாரிடத்தில் அன்பு செலுத்துதல் வேண்டும்?
ஈ) வாழும் முறை யாது?
உ) இப்பாடளுக்கேற்ற தலைப்புத் தருக.
மை என்னும் எழுத்தில் முடியும் சொற்களை
உருவாக்குக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக