வியாழன், செப்டம்பர் 29, 2016

பத்தாம் வகுப்பு -பணித்தாள்

FA-2
பத்தாம் வகுப்பு          பணித்தாள்

கோடிட்ட இடங்களை நிரப்புக
1.ஒரு பொருளைச் சிறப்பித்துகூற அதனை விடச் சிறந்த வேறொரு பொருளோடு ஒப்பிடுவதே _________________எனப்படும்.
2.உவமித்துக் கூறப்படும் பொது இடையில் வரும் உருபுகள்_________________எனப்படும்.
3. சிறப்பிக்கப் படும் பொருளுக்கு ஒப்பாக காட்டப்படும் பொருள்________________
 சிறப்பிக்கப்படும் பொருள் _____________________
5. உவமானம் உவமேயம் இவை இரண்டிற்கும் இடையில் வரும் உறுப்பு___________________________
6. உவமைக்கும் பொருளுக்கும் இடையில் இடம்பெறும் உவம உருபும் பொதுத் தன்மையும் வெளிப்படையாக வருவது ___________________எனப்படும்.
7.உவம உருபோ, பொதுத் தன்மை உணர்த்தும் சொல்லோ, அவை இரண்டுமோ மறைந்து வருவது ________________எனப்படும்.
 தொகை உவமையின் வேறு பெயர் ______________________
9. விரி உவமையின் வேறு பெயர் ____________________________
10. ‘மதிமுகம்’ – இது ________________________உவமை.

கூறியவாறு செய்க.
அ)அமுதமொழி          (உருவகமாக மாற்றுக)
ஆ)தமிழ்த்தேன்                 (உவமையாக மாற்றுக)
இ)தேன் போன்ற மொழி   (தொகை உவமையாக மாற்றுக)
ஈ)பவளவாய்                   (விரி உவமையாக மாற்றுக)
உ)முத்துப்பல்                  (இதில் உவமை எது)
ஊ)பாதமலர்             (உவமையாக மாற்றுக )
எ)கயல் ____________விழியை உடையவள். (உரிய உவம உருபை இணைத்து எழுதுக )
ஏ) வேய்த்தோள் (உரிய உவம உருபை இணைத்து எழுதுக )
ஐ)முழவு உறழ் தடக்கை (உவம உருபை சுட்டிக் காட்டு)
ஒ)கனிவாய் ( உவமேயம் கூறுக )
சான்று தருக்க
அ)விரி உவமை
ஆ)தொகை உவமை
இ)உருவகம்
ஈ)போல
உ)அன்ன
எ)ஒப்ப
ஏ)உவமானம்
ஐ) உவமேயம்
ஒ)உவம உறுப்பு

ஓ)உவமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக