திங்கள், செப்டம்பர் 26, 2016

6 TH SA -1- sep-2016 தமிழ் மாதிரி வினாத்தாள்

tamil



வகுப்பு : 6 ஆம் வகுப்பு                          பாடம் : தமிழ் மதிப்பெண்கள் : 90                                               நேரம் : 3 மணி
 

                                   I.           கீழ்க்காணும் தொடர்களைக் குறில் நெடில் வேறுபாடு அறிந்து நிரப்புக.                                                            2×1=2
1.தென்றல் ____________________ படித்தாள்.(படம்/ பாடம்)
2.சிற்பி _______________ செதுக்கினான். (சிலை/சீலை)
                                   II.           பலவுள் தெரிவு                                                                                      2×1=2
1.உலகபொதுமறை எனப் போற்றப்படுவது
அ) திருக்குறள்                                 ஆ) நாலடியார்                                    இ) நான்மணிக்கடிகை
2.தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர்.
அ)வள்ளுவர்                                         ஆ) உ.வே.சா                                    இ) வள்ளலார்
                                  III.          கோடிட்ட இடத்தை நிரப்புக                                   2×1=2
1.திருவருட்பாவை  ________________ இயற்றினார்.
2.சடகோ______________நாட்டைச் சேர்ந்தவர்.
                                  IV.          அடிபிறழாமல் எழுதுக                                                  2+2=4
1.அன்பு ஈனும் எனத்தொடங்கும் திருக்குறள் செய்யுட்பாடலை அடி பிறழாமல் எழுதுக.                           
இ) தரும்எனமுடியும் திருக்குறள் செய்யுட்பாடலை அடி பிறழாமல் எழுதுக.
                                   V.          பிரித்து எழுதுக                                                         2×1=2
1.தேனருவி  =               2.தமிழருவி=      

                                  VI.          சேர்த்து எழுதுக                                                        2×1=2
1.பணம்+உண்டு=             2. புகழ்+இழந்தேன்=
                                  VII.         பின்வரும் சொற்களை பிழையின்றி எழுதுக               2×1=2
1.பன்னெண்டு                          2.நார்பது-

                                 VIII.         பின்வரும் நிகழ்வுகளுக்கான காரணத்தைக் கண்டறிந்து எழுதுக                                                                                                2×1=2
அ)ஆறுகள் மாசு அடையக்காரணம் _________________
(தொழிற்ச்சாலைக் கழிவு, மழையின்மை, மணல் அள்ளுதல்)
ஆ) மழை குறையக்காரணம் _______________
(காடுகள் அழிப்பு, மண் அரிப்பு, மரம் வளர்த்தல்)

                                  IX.          பின் வருவனவற்றிற்கு  தமிழெண் எழுதுக                2×1=2
அ) மெய் எழுத்துகளின் எண்ணிக்கை ____________
ஆ) உயிரெழுத்துகளின் எண்ணிக்கை ________________

                                   X.          ஒற்றெழுத்தை சேர்த்து எழுதுக                           2×1=2
1.பழத்தை + தின்றேன் =__________________
2.மதுரைக்கு + சென்றேன் = ______________________
                                  XI.          கீழ்க்காணும் சொற்றொடரில் பெயரையும் வினையையும் சுட்டுக                                                         2×1=2
பெயர்              வினை
அ) செய்தி பரவும்           = ________________, __________________
ஆ) குமரன் வருகிறான்      = ________________, __________________
                                  XII.         கீழ்க்காணும் சொற்றொடரில் பொருத்தமான பெயர்ச்சொல்லை இட்டு நிரப்புக                    2×1=2
அ) _________________ மட்டைப் பந்து விளையாட்டில் வென்றது.                 
ஆ) ________________ அழுதாள்

                                 XIII.         குறிப்புகளைப் பயன்படுத்தி நிரப்புக             2×1=2
அ) வளர்ந்த பிள்ளைகள் பாடும் பாடல் ___________
ஆ) சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் ________________.

                                 XIV.         உரிய பொருளைக் கண்டுபிடித்து எழுதுக        2×1=2
1)        பச்சைப் பொய் _______________
2)        பச்சைத் தண்ணீர் ________________

                                 XV.         உரிய இரட்டைக் கிழவிச் சொற்களை நிரப்புக   2×1=2
1)        சுருக்கமாகப் பேசு ; ____________என்று பேசாதே.
2)        வைரக்கல் ____________என மின்னியது.
                                 XVI.         உரிய விடையைத் தெரிவு செய்க                2×1=2
1.உயர்ந்து நிர்ப்பது _______________(மலை/மழை)
2.வானத்தில் இருந்து பெய்வது ____________(மலை/மழை)

                                XVII.        கீழுள்ள கூற்றுகள் சரியா? தவறா?                       2×1=2
அ) பாவேந்தரின் இயற்பெயர் சுப்புரத்தினம்  
ஆ) கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டா

                                XVIII.        மயங்கோலிப் பிழைகளை திருத்தி எழுதுக.               2×1=2
அ) இரு சக்கர வண்டிகள் பலுது பார்க்கப்படும்
ஆ) நால்தோறும் பகல் காட்சி உன்டு

                                 XIX.         உம் சேர்த்து எழுதுக                                     2×2=4
அ) திருவள்ளுவர் கம்பர் பாரதி தமிழ்த்தாயின் தலைமகன்களாவர்
ஆ) மாமல்லபுரம் காஞ்சிபுரம் காண்பதற்குரிய கலை நகரங்களாகும்.

                                 XX.         உரிய ஒற்று எழுத்துகளை எழுதுக                                      2×1=2
அ) தாயை__________போற்றுவோம்.
ஆ) நல்லதை ___________ செய்வோம்.


                                 XXI.         ஓரிரு வரிகளில் விடை தருக                   10×2=20
1.நாலடியார் கருத்துப் படி நன்மை செய்வோர் எத்தனைப் போன்றவர்.
2.மஞ்சள் சிட்டு எப்பகுதியில் வாழும்
3..கல்விக்கு விளக்கு போன்றது எது?
4.பாரதிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?
5.‘உலகம்’ என்னும் பொருளில் வரும் தமிழ் சொற்கள் சிலவற்றை கண்டறிக
6அரசனை குறிக்கும் வேறு பெயர்களை எழுதுக
7.பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் யார்?
8.‘ஆற்றுணா வேண்டுவது இல்’ – என்பதன் பொருள் யாது?
9.பாரதிதாசன் இயற்பெயர் யாது?
10.‘மேகம்’ என்னும் சொல்லின் வேறு பெயர்களை எழுதுக.


                                XXII.        நான்கு வரிகளுக்கு மிகாமல் விடை எழுதுக          4×4=16
1.பாரதியாரின் கனவு
2.கடுவெளிச் சித்தரின் அறிவுரைகளில் சிறப்பான மூன்றனை எழுதுக
3.பெரியாரும் பெண் விடுதலையும் பற்றி எழுதுக.
4.நாட்டுப்புற பாடல்களின் வகைகளை எழுதுக

                                XXIII.        கீழ்க்காணும் கடிதங்களில் ஏதேனும் ஒன்றனை எழுதுக.       1×10=10
1.விடுமுறை விண்ணப்பம் எழுதுக.
(அல்லது)
2.நண்பனுக்கு கடிதம் எழுதுக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக