வகுப்பு : 8ஆம் வகுப்பு பாடம் : தமிழ் மதிப்பெண்கள் :100 நேரம் : 3 மணி
I.
கீழுள்ள பத்தியைப் படித்து அதனைத்
தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு விடையளிக்க 5×1=5
காவிரியின்
தென் கரையில் அமைந்துள்ள நகரம் சிராப்பள்ளி இந்த நகரம் கோவில்களும் நினைவுச்
சின்னங்களும் நிறைந்துள்ள வரலாற்று நகரமாகும். இதன் பழமைக்கு சான்றாக விளங்குவது
மலைக்கோட்டை. இக்கோட்டையிலுள்ள பல்லவர்
காலத்து சிற்பங்கள் காண்போரை கவரும் தன்மையன.
திருச்சிராப்பள்ளியை
தமிழ் மன்னர்கள் மட்டுமன்றி முகலாயர்கள், விசயநகர மன்னர்கள், மராட்டியர்கள்,
ஆங்கிலேயர்கள் ஆண்டுள்ளார்கள். சோழர்களின் தலைநகரமாக விளங்கிய உறையூர்
முற்காலத்தில் கோழி மாநகரம் என்று அழைக்கப்பட்டது.
திரிசிரபுரம்
என்று தொன்மைக்காலத்தில் அழைக்கப்பட்ட திருச்சியில், ஈராயிரம் ஆண்டுப் பழைமை
வாய்ந்த கவின்மிகு கல்லணை, காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்தியப்
பொறியியல் சாதனைகளிலே மேம்பட்டு நிற்கும் இந்த கல்லணை, பண்டைத் தமிழரின் நீர்மேலாண்மைச்
சிந்தனையின் சிகரமாகும்.
திருச்சியின்
சுற்றுலா இடங்களாக முக்கொம்பு, ஊமையன் கோட்டை, புளியஞ்சோலை, பச்சை மலை முதலியன
உள்ளன. தாயுமானவருக்கு ஞானநெறி காட்டிய மௌனகுருவும், தமிழின் முதல் சிறுகதை
எழுத்தாளரான வ.வே.சுப்பிரமணியமும் திருச்சி மண்ணில் தோன்றியவராவர்.
வினாக்கள்
1.காவிரியின்
தென்கரையில் அமைந்துள்ள நகரம் _________________
அ) மதுரை ஆ) சிராப்பள்ளி இ) கோவை
2.மலைக்கோட்டை
சிற்பங்கள் _________________ காலத்தவை ஆகும்.
அ) பாண்டியர் ஆ) பல்லவர் இ) சோழர்
3.சோழர்களின்
தலைநகரம் ______________________
அ) உறையூர் ஆ) கல்லணை இ) கோட்டை
4.பண்டைத்
தமிழரின் நீர்மேலாண்மைக்குச் சான்று
அ) சிற்பம் ஆ) கல்லணை இ) முக்கொம்பு
5.தமிழின்
முதல் சிறுகதை எழுத்தாளர் ___________________________ ஆவார்.
அ) சோழர் ஆ) பல்லவர் இ) வ.வே.சுப்பிரமணியம்
II.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 8×1=8
1.திருக்குறள் _____________ நூல்களுள் ஒன்று.
அ)
எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு இ) பதினெண் கீழ்கணக்கு
2.பிணி என்பதன் பொருள் _________________
அ) நோய்
ஆ) வறுமை இ) ஏழை
3.நளன் உருவில் வந்த தேவர்கள் எத்தனைபேர்?
அ) 3 ஆ) 4 இ) 5
4.சிவகங்கையை ஆண்ட மன்னர்________________
அ)முத்து
வடுகநாதர் ஆ) செல்லமுத்து சேதுபதி இ)ஐதர் அலி
5.கவிஞர் சச்சிதானந்தன் பிறந்த நாடு________________
அ)
இலங்கை ஆ) தமிழ்நாடு இ) மலேசியா
6.கந்தி புராணத்தின் பாட்டுடைத்தலைவன் _______________________
அ) சிவன்
ஆ) பெருமாள் இ) காந்தியடிகள்
7.“தமிழ் நாடகத் தந்தை” எனப் போற்றப்படுபவர்_______________________
அ)
பம்மல் சம்பந்தனார் ஆ) சங்கரதாஸ் சுவாமிகள் இ) ஒளவை சண்முகனார்
8.இணையம் என்ற வடிவத்திற்கு வித்திட்டவர் _______________
அ) ஜான் பாஸ்டல் ஆ) பிம்பெர்னர் லீ இ) லேடி லவ்லேஸ்
III.
கோடிட்ட இடத்தை நிரப்புக 4×1=4
1.மறைமலையடிகள் எழுதிய நாடகம் ________________.
2. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல்__________________.
3..பொதுமக்களின் கருத்துக்களை ___________ வாயிலாக அறியலாம்.
4.தாயுமானவர்
பிறந்த ஊர்_______________
IV.
பொருத்துக 4×1=4
அ) வினைத்தொகை – நாலிரண்டு
ஆ) உவமைத்தொகை – செய்தொழில்
இ) உம்மைத்தொகை – பவளவாய் பேசினாள்
ஈ) அன்மொழித்தொகை – மதிமுகம்
V.
பிரித்து எழுதுக 3×1=3
1.தாய்மையன்பு = 2.பிணியின்றி= 3.கண்ணிறைந்த=
VI.
வினாத்தொடரைப் படித்து ஆம் / இல்லை என விடை
தருக ? 5×1=5
அ) திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையா? (ஆம் /
இல்லை)
ஆ) சூசையப்பர் இயற்றிய நூல் தேம்பவனியா? (ஆம் / இல்லை)
இ) சங்கரதாஸ்சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியரா? (ஆம் / இல்லை)
ஈ) மதங்க சூளாமணி நூலினை சுவாமி விபுலானந்தர் எழுதினாரா? (ஆம் / இல்லை)
உ) வெற்றிலை நட்டான் என்பது சினையாகு பெயரா?. (ஆம் / இல்லை)
VII.
சேர்த்து எழுதுக 4×1=4
அ)மாசு+இலா= ஆ)மலர்+தலை=
இ)பாரதம்+தாய்= ஈ)என்+உள்ளம்=
VIII.
பொருள் தருக 4×1=4
அ)கேண்மை- ஆ)
சுடர்- இ)வள்ளை- ஈ) சம்பு-
IX.
தமிழெண்களை அறிக 2×1=2
அ) 56=____ ஆ) 90=____
X.
பின்வரும் சொற்கள் எவ்வகைத் தொகைநிலைத் தொடர்கள்? 2×1=2
அ)வெற்றிலை பாக்கு ஆ) வளர்புகழ்
XI.
பொருந்தாதவற்றை
தேர்ந்தெடுத்து எழுதுக 5×1=5
அ) ஞான உபதேசம், திருமந்திரம், பரமார்த்த குரு
கதை, தொன்னூல் விளக்கம்,
ஆ) பம்மல் சம்பந்தனார், ஒளவை சண்முகனார்,
சங்கரதாஸ் சுவாமிகள், பரிதிமார் கலைஞர்
இ)செயிற்றியம், முறுவல், நன்னூல், சயந்தம்
ஈ) பவளக்கொடி, இலவகுசா, மனோகரன், பிரகலாதன்
உ) பொரியல், அவியல், சித்திரை, சுண்டல்
XII.
மனப்பாடப் பகுதி (செய்யுள் வடிவில் விடையளி) 2+2+6=10
அ) “உடம்பார் ” .............. எனத் தொடங்கும் திருமந்திரம் செய்யுட்பாடலை அடி பிறழாமல்
எழுதுக.
ஆ) “உடுக்கை” எனத்தொடங்கும் திருக்குறள் செய்யுட்பாடலை அடி பிறழாமல்
எழுதுக.
இ) ‘நட்பு’ எனமுடியும் திருக்குறள் செய்யுட்பாடலை அடி பிறழாமல்
எழுதுக.
XIII.
குறுவினாக்கள் (நான்கனுக்கு மட்டும்
விடையளி) 4×3=12
1)
தாயுமானவர் குறிப்பு எழுதுக?
2)
நாடகத்திற்கு இலக்கணம் வகுத்த நூல்கள் யாவை?
3)
வேலுநாச்சியார் – குறிப்பு எழுதுக.
4)
‘வையக விரிவு வலை’ குறிப்பு எழுதுக.
5)
செய்தி திரட்டலுக்கு உதவும் இன்றியமையாத
ஆறு வினாக்கள் யாவை?
6)
தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களின்
பெயர்களை எழுதுக.
XIV.
குறுவினாக்கள் (நான்கனுக்கு மட்டும்
விடையளி) 4×3=12
1)
அடுக்குத்தொடர் என்றால் என்ன?
2)
ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
3)
உவமைத்தொகையை சான்றுடன் விளக்குக.
4)
மரூஉ என்பது யாது ? சான்று தருக.
5)
வடசொல் என்றால் என்ன? சான்று தருக.
6)
முற்றியலுகரம் என்றால் என்ன? சான்று தருக.
XV.
நெடுவினா 2×5=10
1.பாரதியும் பாரதிதாசனும் திருவள்ளுவரை
எவ்வாறு சிறப்பித்துள்ளனர்?
2.கணினியின் பயன்களை எழுதுக.
XVI.
கட்டுரை எழுதுதல் 1×10=10
அ)காணாமல் போன மிதி வண்டியைக் கண்டுபிடித்து தருதல் வேண்டிகாவல்துறை ஆணையருக்கு
புகார் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) சுற்றுலா செல்ல வேண்டி தந்தைக்கு கடிதம் எழுதுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக