திங்கள், செப்டம்பர் 26, 2016

7 TH SA -1- sep-2016 தமிழ் மாதிரி வினாத்தாள்

cbse tamil


வகுப்பு :7 ஆம் வகுப்பு                                  பாடம் : தமிழ் மதிப்பெண்கள் :100                                      நேரம் : 3 மணி
 


                                   I.           கீழுள்ள பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு விடையளிக்க                 5×1=5
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள நகரம் சிராப்பள்ளி இந்த நகரம் கோவில்களும் நினைவுச் சின்னங்களும் நிறைந்துள்ள வரலாற்று நகரமாகும். இதன் பழமைக்கு சான்றாக விளங்குவது மலைக்கோட்டை. இக்கோட்டையிலுள்ள  பல்லவர் காலத்து சிற்பங்கள் காண்போரை கவரும் தன்மையான.
திருச்சிராப்பள்ளியை தமிழ் மன்னர்கள் மட்டுமன்றி முகலாயர்கள், விசயநகர மன்னர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் ஆண்டுள்ளார்கள். சோழர்களின் தலைநகரமாக விளங்கிய உறையூர் முற்காலத்தில் கோழி மாநகரம் என்று அழைக்கப்பட்டது.
        திரிசிரபுரம் என்று தொன்மைக்காலத்தில் அழைக்கப்பட்ட திருச்சியில், ஈராயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த கவின்மிகு கல்லணை, காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்தியப் பொறியியல் சாதனைகளிலே மேம்பட்டு நிற்கும் இந்த கல்லணை, பண்டைத் தமிழரின் நீர்மேலாண்மைச் சிந்தனையின் சிகரமாகும்.
        திருச்சியின் சுற்றுலா இடங்களாக முக்கொம்பு, ஊமையன் கோட்டை, புளியஞ்சோலை, பச்சை மலை முதலியன உள்ளன. தாயுமானவருக்கு ஞானநெறி காட்டிய மௌனகுருவும், தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளரான வ.வே.சுப்பிரமணியமும் திருச்சி மண்ணில் தோன்றியவராவர்.
வினாக்கள்
1.காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள நகரம் _________________
அ) மதுரை                          ஆ) சிராப்பள்ளி                  இ) கோவை
2.மலைக்கோட்டை சிற்பங்கள் _________________ காலத்தவை ஆகும்.
அ) பாண்டியர்                    ஆ) பல்லவர்                       இ) சோழர்
3.சோழர்களின் தலைநகரம் ______________________
அ) உறையூர்                      ஆ) கல்லணை                  இ) கோட்டை
4.பண்டைத் தமிழரின் நீர்மேலாண்மைக்குச் சான்று
அ) சிற்பம்                            ஆ) கல்லணை                 இ) முக்கொம்பு
5.தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் ___________________________ ஆவார்.
அ) சோழர்                          ஆ) பல்லவர்                       இ) வ.வே.சுப்பிரமணியம்

                                  II.          சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.           8×1=8
1.உலக மொழிகளில் சிறந்து விளங்குவது______________
அ) தமிழ்மொழி                                ஆ) வடமொழி                   இ) மலையாளம்
2.முதுமொழிக்காஞ்சி_________________என வழங்கப்பெறும்.
அ)நன்னெறி                         ஆ) அறநூல்                     இ) அரவுரைக்கோவை
3.காரணப்பொதுபெயர்____________ஆகும்.
அ)வளையல்                      ஆ) மண்                                               இ) நண்டு
4.நான்மணி மாலை என்பது ____________________.
அ) பதினெண் கீழ்கணக்கு            ஆ) காப்பியம்                    இ) சிற்றிலக்கியம்
5.நல்லாதனார் இயற்றிய நூல் ______________
அ) திரிகடுகம்                    ஆ) புறநானூறு                  இ) திருவாரூர் நான்மணிமாலை
6. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக்கப்படுவது________________
அ) திருநெல்வேலி           ஆ) தஞ்சை                        இ) மதுரை
7.தனித்து இயங்கும் எழுத்துக்கள் ________________
அ) சார்பழுத்துக்கள்        ஆ) ஆய்தஎழுத்து                              இ)முதலெழுத்து
8.மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னன்______________
அ) பாண்டியன் நெடுஞ்செழியன் ஆ) கோப்பெருஞ்சோழன் இ) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
                                 III.         கோடிட்ட இடத்தை நிரப்புக                             4×1=4
1.குமரகுருபரர் பிறந்த ஊர் ________________.
2. வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவியின்மீது_______________கொண்டானாம்.
3.காளமேகப் புலவர்  _______________ கோவிலில் பணிபுரிந்தார்.
4.நோய்க்கு மருந்து _______________என்பார் மீனாட்சிசுந்தரனார்.
                                 IV.         பொருத்துக                                             4×1=4
அ) இடுகுறிப் பொதுப்பெயர்             – மரங்கொத்தி
ஆ) இடுகுறிச் சிறப்புப்பெயர்     – பறவை
இ) காரணப் பொதுப்பெயர்              – காடு
ஈ) காரணச் சிறப்புப்பெயர்               – பனை

                                  V.          பிரித்து எழுதுக                                                 3×1=3
1.பூங்கோயில் =                 2.பிணியின்மை=        3.யாதெனின்=  

                                 VI.         சரியா, தவறா?                                         5×1=5
அ)நலங்கிள்ளியின் தலைநகரம் உறையூர்       (சரி/தவறு)
ஆ) மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் வ.உ.சி.    (சரி/தவறு)
இ) பாண்டியர்தம் தலைநகரம் தஞ்சாவூர்.       (சரி/தவறு)
ஈ) காளியப்பன் ஊர் போற்றும் நல்லவன்       (சரி/ தவறு)
உ) “வந்தி” என்னும் கிழவிக்காக மண்சுமந்து பாண்டியனிடம் இறைவன் அடிபட்டார். (சரி/ தவறு)

                                VII.        சேர்த்து எழுதுக                                        4×1=4
அ)தன்+நெஞ்சு=         ஆ)எட்டு+கால்=
இ)புகழ் +இல்லை               ஈ)அறிவு+உடைமை=

                                VIII.       பொருள் தருக                                          2×1=2
அ)பண்                     ஆ) வனப்பு

                                 IX.         தமிழெண்களை அறிக                                 2×1=2
அ) 56=____                      ஆ) 90=____

                                  X.          விடுகதைக்கு ஏற்ப விடை எழுதுக                      2×1=2
1.ஊருக்கெல்லாம் ஒரேகூரை; மழை வந்தால் ஒழுகும் கூரை
2. காலில்லாத பந்தல்; பார்க்கப்பார்க்க வியப்பு.
                                 XI.         சார்பெழுத்துகளை வட்டமிடுக                         5×1=5
அ) அன்பு ஆ) அடக்கம் இ) இன்பம் ஈ) மகிழ்ச்சி உ) உணவு
                                 XII.        வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.                  2×1=2
அ) அ+குடம்=           ஆ) எ+பள்ளி=          

                                XIII.        மனப்பாடப் பகுதி (செய்யுள் வடிவில் விடையளி)        2+2+6=10
அ) “பண்ணினை இயற்கை” .............. எனத்தொடங்கும் கடவுள் வாழ்த்துச் செய்யுட்பாடலை அடி பிறழாமல் எழுதுக.
ஆ) “எல்லா விளக்கும்” எனத்தொடங்கும் திருக்குறள் செய்யுட்பாடலை அடி பிறழாமல் எழுதுக.                
இ) ‘சுடும்’ எனமுடியும் திருக்குறள் செய்யுட்பாடலை அடி பிறழாமல் எழுதுக.

                                                               
                                XIV.       குறுவினாக்கள் (நான்கனுக்கு மட்டும் விடையளி)       4×3=12
1)        இறைவன் உயிரில் வைத்தது எதனை?
2)        தமிழர் தம் பண்பாட்டை விளக்கும் நூல்கள் யாவை?
3)        மீனாட்சிசுந்தரனாரிடம் தமிழ் கற்றவர்கள் யாவர்?
4)        கலைமகள் என்ன செய்துகொண்டிருக்கிறாள்?
5)        மதன்மோகன் மாலவியாவின் பேச்சுக்குக் காந்தியடிகள் கூறும் உவமைகள் யாவை?
6)        இறைவன் யாருக்காக மண் சுமந்தார்?

                                XV.        குறுவினாக்கள் (நான்கனுக்கு மட்டும் விடையளி)       4×3=12
1)        காலப்பெயர்களை நான்கினை எழுதுக?
2)        காரணப்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
3)        உரிச்சொல் என்றால் என்ன? சான்று தருக.
4)        அஃகேனத்தின் வேறுபெயர்களை எழுதுக.
5)        முதலெழுத்து என்றால் என்ன?
6)        இடப்பெயர்கள் நான்கனை எழுதுக.

                                XVI.       நெடுவினா                                              2×5=10
1.வேந்தனின் கடனாக புறநானூறு குறிப்பிடும் செய்தி யாது?
2.இறைவன் மண்சுமந்த வரலாற்றை எழுதுக.


                               XVII.       கட்டுரை எழுதுதல்                                     1×10=10
அ)காணமல் போன மிதி வண்டியைக் கண்டுபிடித்து தருதல் வேண்டிகாவல்துறை ஆணையருக்கு புகார் கடிதம் எழுதுக.
(அல்லது)

ஆ) சுற்றுலா செல்ல வேண்டி தந்தைக்கு கடிதம் எழுதுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக