வெள்ளி, ஜனவரி 06, 2017

மாதிரித் தேர்வு - 9 th 50 marks


வகுப்பு :9 ஆம் வகுப்பு                                                    பாடம் : தமிழ்
மதிப்பெண்கள் : 50                                       நேரம் : 2 மணி
           I.           கோடிட்ட இடத்தை நிரப்புக.                                                              10*1=10                          
1. அளை என்பதன் பொருள்
அ) புற்று ஆ) பாம்பு இ) பாம்புப்புற்று
2. பாடலின் ஈற்றடியைப் பாடலின் முதலில் கொண்டு பொருள் கொள்வது _________ பொருள்கோள் ஆகும்.
அ) அலைமறிப்பாப்பு பொருள்கோள்
ஆ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
இ)அடிமறி மாற்றுப் பொருள்கோள்
ஈ) தாப்பிசைப் பொருள்கோள்
3.செய்யுளில் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்ப்பக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்வது
அ) அலைமறிப்பாப்பு பொருள்கோள்
ஆ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
இ) அடிமறி மாற்றுப் பொருள்கோள்
ஈ) தாப்பிசைப் பொருள்கோள்
4.செய்யுளில் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது_________
அ) அலைமறிப்பாப்பு பொருள்கோள்
ஆ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
இ) அடிமறி மாற்றுப் பொருள்கோள்
ஈ) தாப்பிசைப் பொருள்கோள்
5.பொருள்கோள்_____________ வகைப்படும்.
        அ) ஏழு  ஆ) எட்டு                     இ) பதினாறு
6.ஆகுபெயர்______________ வகைப்படும்
        அ) ஏழு  ஆ) எட்டு                     இ) பதினாறு
7. தொடை____________ வகைப்படும்
        அ) ஏழு  ஆ) எட்டு                     இ) பதினாறு
8. இணை எதுகை என்பது _____________, __________________ சீர்களில் இரண்டாமெழுத்து ஒன்றி வரத்தொடுப்பது.
        அ) 1,2                               ஆ) 1,3                              இ) 1,4
9. கருவிப்பொருளை குறிக்காமல், அதனின் தோன்றிய காரியத்துக்கு ஆகிவருவது ____________ ஆகுபெயராகும்.
        அ) கருவியாகுபெயர்
        ஆ) காரியவாகு பெயர்
        இ) உவமையாகு பெயர்
        ஈ) கருத்தாவாகு பெயர்
10. நான் சமையல் கற்றேன் இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் ______________ .
அ) கருவியாகுபெயர்
        ஆ) காரியவாகு பெயர்
        இ) உவமையாகு பெயர்
        ஈ) கருத்தாவாகு பெயர்
          II.          சான்று தருக.                                                                                                     4*1=4
1. கருவியாகு பெயர்
அ) யாழ் கேட்டு மகிழ்ந்தேன்
ஆ) நான் சமையல் கற்றேன்
இ) திருவள்ளுவரைப் படித்துப் பார்
ஈ) நாரதர் வருகிறார்.
2. காரியவாகு பெயர்
அ) யாழ் கேட்டு மகிழ்ந்தேன்
ஆ) நான் சமையல் கற்றேன்
இ) திருவள்ளுவரைப் படித்துப் பார்
ஈ) நாரதர் வருகிறார்.
3. கருத்தாவாகு பெயர்
அ) யாழ் கேட்டு மகிழ்ந்தேன்
ஆ) நான் சமையல் கற்றேன்
இ) திருவள்ளுவரைப் படித்துப் பார்
ஈ) நாரதர் வருகிறார்.
4. உவமையாகு பெயர்
அ) யாழ் கேட்டு மகிழ்ந்தேன்
ஆ) நான் சமையல் கற்றேன்
இ) திருவள்ளுவரைப் படித்துப் பார்
ஈ) நாரதர் வருகிறார்.
         III.         சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                          6*1=6
1.முதல், மூன்று, நாலாம் சீர்களில் ஒத்து வருவது
        அ) முரண் ஆ) மேற்கதுவாய் இ)கீழ்கதுவாய்
2. அளவடிக்கு____________ என்னும் வேறுபெயருண்டு
        அ) குறளடி ஆ) சிந்தடி இ) நேரடி
3. கூழை
        அ)124                               ஆ)1234                           இ)123                ஈ)124
4.மேற்கதுவாய்
அ)124                               ஆ)1234                           இ)123                ஈ)124
5. கீழ்கதுவாய்
அ)124                               ஆ)1234                           இ)123                ஈ)124
6. முற்று
அ)124                               ஆ)1234                           இ)123                ஈ)124
         IV.         சிறுவினா                                                                                                                                      4+5=9
1.        இயேசுநாதரின் அருள் திறனை எழுதுக.
2.        பொங்கல் கொண்டாடும் முறையை விளக்குக
          V.          துணைப்பாடம்                                                                                                                          8
நம்மாழ்வார் போட்ட கணக்கு என்ன?
    VI.    கீழ்வரும் பத்தியைப் படிக்கவும். இதனைத் தொடர்ந்து வரும் பல்விடை வினாவுக்கு உரிய சரியான விடையை எடுத்து எழுதவும்.               5*1=5
        ஜெர்மனி நாட்டின் கொடுங்கோலராகக் கருதப்பட்டவர் ஹிட்லர். ‘இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆட்சிபுரியும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது ஐயமே’ என்று இந்தியர்களை குறைத்து மதிப்பிட்டு, ஒருமுறை அவர் கருத்துக் கூறினார். இதைக்கேட்ட செண்பகராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராக திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்புக் கேட்கச் செய்தார். உலகையே  நடுங்கச் செய்த கொடுங்கோலராக இருந்தாலும் அவரையே மன்னிப்பு கேட்கச்செய்த மாவீரன் செண்பகராமனின் நாட்டுப்பற்று போற்றுதற்குரியதாகும்.
        பெற்ற தாயையும் பிறந்த நாட்டையும் மதிக்கக் கற்றுக்கொள்ளாதவன் கற்றும் பதராகவே கருதப்படுவான். ஆகவே ஒவ்வொருவரும் பெற்ற தாய்க்கும் நாட்டுக்கும் பேரும்புகழும் சேர்க்க வேண்டும்.
வினாக்கள்:
அ) கொதித்தெழுந்தது யார்?
அ) ஹிட்லர்                     ஆ) தாய்
இ) செண்பகராமன்            ஈ) ஜெர்மனி
ஆ) இந்தியருக்கு எந்த தகுதி இல்லை என்று ஹிட்லர் கூறினார்?
        அ) போர் திறமை                ஆ) வாதாடும் திறமை
        இ) கற்கும் திறமை           ஈ) ஆட்சிபுரியும் திறமை
இ) ஹிட்லரை மன்னிப்புக் கேட்கச் செய்தவர் யார்?

        அ) காந்தி                       ஆ) செண்பகராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக