திங்கள், ஜனவரி 30, 2017

68 குடியரசு தினம்

*68வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரை*

*இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏராளமான புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குடியரசு தின உரையில் கூறினார்.*

*ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய குடியரசு தின உரையின் முக்கிய அம்சங்கள்:*

*இந்திய ஜனநாயகம் ஸ்திரமாக உள்ளது.*

*நாம் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறோம். சர்வதேச அளவில் சவாலான நிலை நிலவும் போதும் வலுவாக உள்ளோம்.*

*உலகின் 3வது மிகப்பெரிய ராணுவம் நம்மிடம் உள்ளது.*

*அறிவியல், தொழில்நுட்பத்தில் 2வது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளோம்.*

*விண்வெளி ஆய்வில் சர்வதேச அளவில் 6வது இடத்தில் உள்ளோம்.*

*சுதந்திர பெற்ற பிறகு கல்வி அறிவு 4 மடங்கு உயர்ந்துள்ளது.*

*குடிமக்களின் சராசரி ஆயுட்காலம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.*
 
*சராசரி இந்தியர்களின் வருமானம் 10 மடங்கு அதிகரித்துள்ளது.*

*தொழில் துறையில் 10 வது இடத்தில் உள்ளோம்.*

*வறுமை கோட்டு கீழ் உள்ளோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.*

*இளைஞர்கள் பல கனவுகள் மற்றும் விருப்பங்களுடன் உள்ளனர். அவர்களுக்கு தேவையான கல்வி முறை உருவாக்கி மேம்படுத்த வேண்டும்.*

*இளைஞர்கள் கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.*

*ஜனநாயகத்தில் மக்களுக்கு உரிமைகள் உள்ளது போல் கடமைகளுக்கும் உள்ளது.*

*ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் தற்காலிக தேக்க நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நிதி பற்றாகுறை கட்டுக்குள் உள்ளது.*

*இந்தியாவின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, துாய்மை இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.*

*ஊரக பொருளாதார வேலைவாய்ப்பு திட்டங்களை அதிகரிக்க வேண்டும்.*

*ஜனநாயகத்தை மேம்படுத்த நுண்ணறிவுடன் கூடிய பார்வை தேவை.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக