சனி, ஜனவரி 07, 2017

மாதிரித் தேர்வு -10 th SA2

மாதிரித் தேர்வு -1
வகுப்பு : 10 ஆம் வகுப்பு                                    பாடம் : தமிழ்
மதிப்பெண்கள் :50                                         நேரம்  : 02.00
 


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                     3X1=3
1) பாலை நிலத்திற்குரிய பறவைகள்
அ) கிளி, மயில்        ஆ) நாரை, அன்னம்    இ) புறா, பருந்து
2) கருமை+ குழி என்பது _____________என்னும் விதிகளின் படி புணரும்
அ) ஆதிநீடல், இனமிகல்        ஆ) ஈறுபோதல், இனமிகல்              இ) இனமிகல்
3) மார்கழி தை ஆகிய இரண்டும்_____________ கலத்திற்குரியன.
      அ) பின்பனி     ஆ) முன்பனி     இ) இளவேனில்       

II. கோடிட்ட இடத்தை நிரப்புக                                             7×1= 7
1.‘பொன்+ குடம்=____________________
அ) பொட்குடம்         ஆ) பொன்குடம் இ) பொற்குடம்
2..விகாரப் புணர்ச்சி _____________ வகைப்படும்
அ) கெடுதல்    ஆ) இரண்டு    இ) மூன்று
3. றகரம் _____, _________ ஆகத் திரிந்து புணரும்
அ) ண,ல       ஆ) ல, ள       இ) ன,ல
4.அகம், புறம் ஆகிய இரண்டும் ___________ இலக்கணம்
        அ) பொருள்    ஆ) அன்பின் ஐந்திணை இ) அகப்பொருள்
5.நிலமும் பொழுதும் _____________
        அ) முதற்பொருள் ஆ) கருப்பொருள் இ) உரிப்பொருள்
6. அகத்திணைகள் ___________ வகைப்படும்
        அ) ஐந்து       ஆ) பன்னிரண்டு        இ) ஏழு
7. மறுத்த நிலத்திற்குரிய தெய்வம்
        அ) திருமால்   ஆ) இந்திரன்    இ) வருணன்

IV. சரியான சொற்றொடரை தெரிவு செய்க                        5×1=5
   (i)    அ) ற கரம் ன,ள வாகத் திரிந்து புணரும்
ஆ) ற கரம் ன,ல வாகத் திரிந்து புணரும்
இ) ற கரம் ல,ள வாகத் திரிந்து புணரும்
ஈ) ற கரம் ட,ல வாகத் திரிந்து புணரும்

   (ii)   அ) புணர்ச்சி ஐந்து  வகைப்படும்
ஆ) புணர்ச்சி இரண்டு  வகைப்படும்
இ) புணர்ச்சி மூன்று  வகைப்படும்
ஈ) புணர்ச்சி நான்கு வகைப்படும்

  (iii)  அ) மருதம் முதலை, சுறா
ஆ) மருதம் புலி, கரடி
இ) மருதம் முயல்,மான்
ஈ) மருதம் எருமை, நீர்நாய்

       (iv)       அ) மகர ஈற்றுப் புணர்ச்சி பசுமை+கூழ்
ஆ) மகர ஈற்றுப் புணர்ச்சி வட்டம்+ கல்
இ) மகர ஈற்றுப் புணர்ச்சி கிழக்கு+ நாடு
ஈ) மகர ஈற்றுப் புணர்ச்சி வாழை+ பழம்

        (v)      அ) பொருள் இலக்கணம் ஐந்து வகைப்படும்
ஆ) பொருள் இலக்கணம் நான்கு  வகைப்படும்
இ) பொருள் இலக்கணம் மூன்று  வகைப்படும்
ஈ) பொருள் இலக்கணம் இரண்டு வகைப்படும்

V. கட்டுரை வடிவில் விடை எழுதுதல் ( ஏதேனும் ஒன்றுக்கு விடையளி)                                                             8
    1. முன்னுரை –மரங்களின் பயன்கள்- அழிப்பதனால் ஏற்படும் தீமைகள் – இயற்கையைக் காப்பதில் இளைஞர்களின் பங்கு – முடிவுரை.
        2.முன்னுரை – நான் விரும்பும் இலக்கியம்- உலகப்பொதுமறை திருக்குறளின் நூல் அமைப்பு – மக்களின் நல்ல நண்பன் திருக்குறள் – முடிவுரை.
        3. முன்னுரை – நூலறிவு – நூலகங்களும் அவற்றின் வகைகளும் – பராமரிப்பும் பயனுள்ள படிப்பில் ஆர்வமும் – நூலகங்களில் படித்துயர்ந்த சான்றோர்கள் – அவர்கள் போல யாவரும் சிறக்க முயலுதல்-முடிவுரை.
Vi. துணைப்பாடம்                                                      8
    1. தொன்மைக்கால நிகழ்வுகளை கண்டறிவதற்கு தடையங்கள்  
       எவ்வாறு உதவுகின்றன.
VIII. சிறுவினா                                                 5+4=9
அ) தமிழன் அறிவியல் முன்னோடி என்பதனை விளக்குக.
ஆ) போலிப் புலவர்களை தண்டிப்போர் யாவர்?

 IX . கீழுள்ள பாடலைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்கு விடையளிக்க                                                                                          5 
அரியா சனமுனக்கே யானால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே – விரிவார்
திகழ்பா ஒருநான்குஞ்செய்யுல்வரம் பாகப்
புகழ்பா வினங்கள்மடைப் போக்கா – நிகழவே
வினாக்கள்
1. சீத்தியர் பொருள் கூறுக?
அ) போலிப்புலவர்      ஆ) சிறப்பானவர்        இ) செல்வந்தர்
2. நாளிகேரம் பொருள் தருக?
அ) வயல்   ஆ) தேங்காய்   இ) நாற்பொருள்  
3.நால்வகைப் பாக்களும் வயலுக்கு ____________அமைந்துள்ளன.
அ)விதை       ஆ)நீர்           இ)வரப்பு
4. அரியாசனம் பொருள் தருக
அ) சிங்கம்       ஆ)சிங்காதனம்        இ) அரிச்சந்திரன்
5.சிற்றிலக்கியங்கள்____________________வகைப்படும்
அ)அறுபத்துமூன்று     ஆ)பதினெட்டு     இ)தொண்ணூற்றாறு

x. கீழ்வரும் பத்தியைப் படிக்கவும். இதனைத் தொடர்ந்து வரும் பல்விடை வினாவுக்கு உரிய சரியான விடையை எடுத்து எழுதவும்.               5*1=5
        ஜெர்மனி நாட்டின் கொடுங்கோலராகக் கருதப்பட்டவர் ஹிட்லர். ‘இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆட்சிபுரியும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது ஐயமே’ என்று இந்தியர்களை குறைத்து மதிப்பிட்டு, ஒருமுறை அவர் கருத்துக் கூறினார். இதைக்கேட்ட செண்பகராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராக திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்புக் கேட்கச் செய்தார். உலகையே  நடுங்கச் செய்த கொடுங்கோலராக இருந்தாலும் அவரையே மன்னிப்பு கேட்கச்செய்த மாவீரன் செண்பகராமனின் நாட்டுப்பற்று போற்றுதற்குரியதாகும்.
        பெற்ற தாயையும் பிறந்த நாட்டையும் மதிக்கக் கற்றுக்கொள்ளாதவன் கற்றும் பதராகவே கருதப்படுவான். ஆகவே ஒவ்வொருவரும் பெற்ற தாய்க்கும் நாட்டுக்கும் பேரும்புகழும் சேர்க்க வேண்டும்.
வினாக்கள்:
அ) கொதித்தெழுந்தது யார்?
அ) ஹிட்லர்                     ஆ) தாய்
இ) செண்பகராமன்            ஈ) ஜெர்மனி
ஆ) இந்தியருக்கு எந்த தகுதி இல்லை என்று ஹிட்லர் கூறினார்?
        அ) போர் திறமை                ஆ) வாதாடும் திறமை
        இ) கற்கும் திறமை           ஈ) ஆட்சிபுரியும் திறமை
இ) ஹிட்லரை மன்னிப்புக் கேட்கச் செய்தவர் யார்?
        அ) காந்தி                       ஆ) செண்பகராமன்
        இ) பெற்ற தாய்         ஈ) கொடுங்கோலர்
ஈ) ஹிட்லர் எவ்வாறு மன்னிப்பு  கேட்டார்?
        அ) நேரில் வந்து                 ஆ) எழுத்து முலம்
        இ) தொலைபேசி முலம்       ஈ) பரிசுகள் முலம்
உ) எந்நாட்டின் கொடுங்கோலராக  கருதப்பட்டவர் ஹிட்லர்?
        அ) இந்தியா                     ஆ) பாகிஸ்தான்
        இ) ஜெர்மனி                     ஈ) தமிழ்நாடு

-***********--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக